சீனாவின் பெய்ஜிங்கில்
முதன் முறையாக ஓட்டுநர் இன்றி தானாக இயங்கும் சுரங்க தொடர்வண்டி சேவை விரைவில் தொடங்கப்பட
உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் தொடர்வண்டிகள் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா தொடர்வண்டி சேவையில் சிறந்து விளங்குகிறது.
புல்லட் தொடர்வண்டி, சுரங்க தொடர்வண்டி சேவையில் அதிவிரைவான வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையில் அங்கு ஓட்டுநர் இன்றி தானாக இயங்கும் சுரங்க தொடர்வண்டி சேவை விரைவில்
தொடங்கப்பட உள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில் யங்பாங்கில் இருந்து பாங்
ஷான் வரை 16.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆளில்லாமல் இயங்கும் வகையில் தொடர்வண்டி தண்ட
வாளம் அமைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே அதாவது சீனாவிலேயே உருவாக்கப்பட்ட
தொழில் நுட்பமாகும். இந்தக் கட்டுமான பணிகள் இந்த ஆண்டுக்குள் முடியும்
என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, புதிதாக உருவாக்கப்படும் 2 தொடர்வண்டி தண்டவாள வழித்தடங்களில்
இந்த ஆண்டு இறுதியில் தொடர்வண்டிகள் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



