இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு
ஆதரவாக செயல்படுவார் என்ற திமுக புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை ஆணையாளர் ஜார்ஜை
தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. புதிய காவல்துறை ஆணையாளராக கரன்சின்ஹா
நியமிக்கப்பட்டுள்ளார். செயலலிதா
மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள இராதாகிருட்டிணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஏப்ரல்
12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 9ம் தேதி
பிறப்பித்தது. அறிவிப்பு செய்த அன்றே நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாகவும் தேர்தல்
ஆணையம் அறிவித்தது. சென்னை
காவல்துறை ஆணையாளர் ஜார்ஜ், கடந்த முறை பொதுத் தேர்தலின்போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக
செயல்படுவதாக புகார் எழுந்ததால் மாற்றப்பட்டார். இந்த
நிலையில் கரன்சின்ஹா புதிய காவல்துறை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையம்
இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனிடையே
காவல்துறை ஆணையாளர் ஜார்ஜை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
ஜார்ஜுக்கு புதிய பதவி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சென்னை நகர காவல்துறை
ஆணையாளர் அதிரடியாக மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின்
புகாரை ஏற்று முதலில் இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரி பத்மஜா
தேவி மாற்றப்பட்டு பிரவீண் நாயர் நியமிக்கப்பட்டார். இப்போது காவல்துறை ஆணையாளர் ஜார்ஜ்
மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



