செவ்வாய் கோளில் பறக்கவிடப்பட்ட உலங்கியைப் பார்த்து உணர்ச்சி பொங்க கண்கலங்கினர் நாசா விண்வெளி இயல்அறிவர்கள். 07,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: செவ்வாய் கோளில் உலங்கியைப் பறக்கவிட்டு விண்வெளி வரலாற்றில் நாசா இயல்அறிவர்கள் (சயின்டிஸ்ட்கள்) புதிய சாதனையைப் படைத்துள்ளனர். பெர்செவெரன்ஸ் ரோவரின் உதவியுடன் செவ்வாய்க்கு இன்ஜெனியூட்டி என்று பெயரிடப்பட்டுள்ள சிறிய வகை உலங்கி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தனது ஏழு மாத விண்வெளி பயணத்திற்கு பிறகு செவ்வாய் கோளினைச் சென்றடைந்த இந்த உலங்கி சுமார் 40 விநாடிகள் பறந்து தரையிறங்கியது. இதனை கலிபோர்னியாவில் உள்ள நாசா மையத்தில் இருந்து பார்வையிட்ட நாசா இயல்அறிவர்கள் உணர்ச்சி பொங்க கண்கலங்கினர். இந்த வெற்றியின் மூலம் பிற கோள்கனை ஆய்வு செய்யும் முறையில் புதிய மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.