தமிழக உழவர்கள்
எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றி, அமெரிக்காவில், மூன்று நகரங்களில் பேசப்போவதாக, உச்சநீதிமன்ற
முன்னாள் நீதிஅரசர், மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு மீதான
தடையை நீக்க வலியுறுத்தி, சென்னை மெரினாவில் தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய
அறவழி போராட்டம், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிஅரசர் மார்க்கண்டேய கட்ஜுவை வெகுவாக
ஈர்த்தது. இதையடுத்து, அவர், ‘நானும் ஒரு தமிழன்’
என, கூறி வருகிறார். இதற்கிடையே, வறட்சி நிவாரணம், உழவர்கள் தற்கொலைக்கு
தீர்வு, நதிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லியில், தமிழக உழவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும், கட்ஜு, தன்,
முகநூல் பக்கத்தில்- அமெரிக்க தமிழர்கள் சார்பாக, சாக்ரமெண்டோ, டல்லாஸ், அட்லாண்டா
நகரங்களில் நடத்தப்படும் விழாவுக்கு, செல்ல உள்ளேன். அங்கு, தமிழக விவசாயிகள் எதிர்
நோக்கும் இன்னல்கள் பற்றியும் பேச உள்ளேன். என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில்
நடக்கும் நிகழ்ச்சிகளில், மார்க்கண்டேய கட்ஜுவின் உரையுடன், கேள்வி - பதிலும் இடம்பெறும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகள் ஏற்பாடு
செய்துள்ளன. தமிழக உழவர்கள்
எதிர்நோக்கும் பிரச்னைகளையும், அவர்களுக்கு அமெரிக்க
வாழ் தமிழர்கள் எந்த வகையில் உதவலாம் என்பது போன்ற திட்டங்களையும், தன் உரையில் மார்க்கண்டேய
கட்ஜு எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது தமிழர்கள் பிரச்சனைகளை உலகளாவி எடுத்துச் செல்லுகிற
முயற்சி வரவேற்கத் தக்கதே.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



