Show all

இந்தியாவும் இணையுமா! போயிங் 737 விமானங்களை தடை செய்யும் நாடுகள் பட்டியலில்

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா நாடுகள் போயிங் 737  மேக்ஸ் விமானத்துக்கு தடை விதித்துள்ளன. 

அமெரிக்காவை சேர்ந்த போயிங் விமான நிறுவனம் தயாரிக்கும் 737 மேக்ஸ் விமானங்கள், கடந்த 5 மாதங்களில் 2 விபத்துகளைச் சந்தித்துள்ள. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு  இந்தோனேசியாவின் லயன் ஏர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கடலில் விழுந்த விபத்தில் 189 பேர் பலியாகினர்.

இந்த நிலையில் அண்மையில் எத்தியோப்பிய விமான விபத்தில் 157 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக பல நாடுகள் இந்த விமானத்தை இயக்க தடை செய்துள்ளதுடன், புதிய விமானங்களை வாங்கும் ஒப்பந்தங்களையும் மாற்றி வருகின்றன. 

இதற்கிடையே இந்த சூழலை கவனித்து வருவதாக இந்திய விமான போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,090.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.