28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட்டை மூட நடத்தப் பட்ட மக்கள் போராட்டத்தில் 13 உயிர்கள் பலிகொண்டது காவல்துறை. இதில் மாநில அரசில் இருக்கிற அதிமுகவிற்கும், நடுவண் அரசில் பொறுப்பேற்றிருக்கிற பாஜகவிற்கும் முழு பங்கு உண்டு. நமக்கேன் வம்பு என்று அதிமுக இந்தத் தொகுதியை பாஜகவிற்கு கழட்டி விட்டு விட்டது. பாஜகவின் நையாண்டி கதைத்தலைவி தமிழிசை இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாராம். கிட்டதட்ட இந்தச் சேதி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இப்போது புதியதாக ஒரு வேட்பாளராக தமிழ் பேரரசு கட்சியின் தலைவரும், இயக்குனருமான கவுதமனும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போரட்டத்தின் போது 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார் கவுதமன். இதனால் அங்குள்ள மக்களில் சிலர் கவுதமனை தேர்தலில் நிற்க அழைத்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து யோசித்துவரும் கவுதமன் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,089.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.