உறைந்த மினியாபோலிஸ் ஆற்றைக் நடைப்பயணம் மூலம் கடக்கக் கூகிள் வரைபடம் அவரை வழிநடத்தியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். அந்த நபர் கூகிள் வரைபட அறிவுரைப்படி உறைந்த ஆற்றின் மேல் நடந்து, ஆற்றைக் கடக்க முயன்றிருக்கிறார். 01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மிடுக்குப்பேசி பயனர்கள், கூகுள் பயன்பாடுகளில் கூகிள் வரைபடம் மிக முதன்மையானது என கொண்டாடுகின்றனர். உலகில் உள்ள அனைத்து இடங்களின் துல்லியமான திசைகளை நொடியில் உங்கள் கையில் கொண்டு வந்து சேர்க்கிறது கூகுள் வரைபடச் செயலி. அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் தான் உறைந்த ஆற்றில் விழுந்ததற்குக் கூகிள் வரைபடம் தான் காரணம் என்று புகாரளித்துள்ளார். இந்த நிகழ்வு அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில் இரவு நேரத்தில் நடந்தேறியுள்ளது. அதிகாலை 3:00 மணியளவில் இந்த நிகழ்வு நடந்ததாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உறைந்த மினியாபோலிஸ் ஆற்றைக் நடைப்பயணம் மூலம் கடக்கக் கூகிள் வரைபடம் அவரை வழிநடத்தியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். அந்த நபர் கூகிள் வரைபட அறிவுரைப்படி உறைந்த ஆற்றின் மேல் நடந்து, ஆற்றைக் கடக்க முயன்றிருக்கிறார். எதிர்பாராத விதமாகப் பனிக்கட்டி உடைந்து ஆற்றினுள்ளே விழுந்திருக்கிறார். கரையை ஒட்டிய தாழ்வான இடத்தில் உறைந்த நீருக்குள் பாதி மூழ்கியிருக்கிறார். பின் சரியான நேரத்தில் அவர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டிருக்கிறார். தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்ட பின், ஏன் ஆற்றின் குறுக்கே நடக்க முயன்றார் என்று கேட்டபோது, கூகிள் வரைபடம் ஆற்றைக் கடக்க இந்த வழியை அறிவுறுத்தியதாகக் கூறியுள்ளார். உண்மையில் கூகிள் வரைபடம் அருகிலிருந்த ஸ்டோன் ஆர்ச் பாலத்தைப் பயன்படுத்தி ஆற்றைக் கடக்கச் சொல்லியுள்ளது. அந்த நபர் அதைச் சரியாகக் கவனிக்காமல் ஆற்றின் குறுக்கே நடந்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



