சென்னை கண்வலிக்கு கண் கண்ணாடி அணிந்து, பலர் நோய் பரவலில் இருந்து தற்காத்துக் கொண்டதைப் போல, கொரோனா பரவல் தடுப்புக்கும்- இனி மூக்கு வாயை மறைக்கும் முகமூடியோடு, கண்ணை மறைக்க கண் கண்ணாடியும் அணிவது கூடுதல் பாதுகாப்பு என்று ஆய்வில் தெரிய வருகிறது. 09,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: வுகானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் கண் கண்ணாடி அணிந்தவர்கள் குறைவான அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று ஆய்வறிஞர்கள் தெரிவிக்கின்றனர். கண் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா நுண்நச்சு பாதிக்கும் அபாயம் ஐந்து மடங்கு குறைவாக உள்ளது என தெரியவந்துள்ளது. அண்மை ஆய்வில், கண் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா நுண்நச்சு பாதிக்கும் அபாயம் ஐந்து மடங்கு குறைவாக உள்ளது என தெரியவந்துள்ளது. சீனாவின் 80விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் மயோபியா என்றதொரு கண் குறைபாடு உடையவர்களாக இருந்தனர். இதனால் சீன நபர்கள் அனைத்து அகவையினரையும் கண் கண்ணாடி அணிவதை பொதுவானதாக மாற்றியது. இந்த நிலையில், வுகானில் கண் கண்ணாடி அணிந்தவர்கள் கொரோனாவால் குறைவாக பாதிக்கப்பட்டிருந்தனர் என்று ஆய்வறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக கண் கண்ணாடிகளை அணிந்த கொரோனா நோயாளிகள், கண்கண்ணாடி அணியாதவர்களுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கையில் மிகக் குறைவு என்று ஆய்வறிஞர்கள் கண்டறிந்தனர். இந்தக் கண்டுபிடிப்பு அன்றாடம் கண்ணாடிகளை அணியும் நபர்கள் கொரோனாவுக்கு எளிதில் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற முடிவுக்கு கொண்டு சென்றது. தொற்றுநோய் பரவியதில் இருந்து உலக நலங்கு நிறுவனம் போன்ற உயர் நிறுவன மருத்துவ அதிகாரிகள், உடலில் நுண்நச்சு ஏற்படும் அபாயம் அதிகரிப்பதால் முகங்களை தொடுவதை தவிர்க்குமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவை நுண்நச்சு எளிதாக நுழையும் இடங்களாகும் என்று கூறப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



