சட்டீஸ்கர் மாநிலம் இராய்ப்பூரில் நடந்த விநோதமான போட்டிவொன்றில் மாருதி காருக்கு மாட்டுச்சாணத்தால் ஒரு அங்குலத்திற்கு மூடாக்கு செய்து தனித்துவமான கார் என்கிற பரிசை வென்று வியப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு உள்ளூர்வாசி. 01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சட்டீஸ்கர் மாநிலம் இராய்ப்பூரில் நடந்த விநோதமான போட்டிவொன்றில் மாருதி காருக்கு மாட்டுச்சாணத்தால் ஒரு அங்குலத்திற்கு மூடாக்கு செய்து தனித்துவமான கார் என்கிற பரிசை வென்று வியப்;பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு உள்ளூர்வாசி. இந்தியாவில் வெயில் கொடுமை அதிகரிக்கும் காலங்களில், தங்களுடைய வாகனங்களுக்குள் வெப்பம் ஏறாமல் இருக்க உரிமையாளர்கள் பலர் நூதன முறைகளை கையாள்வது வழக்கம். ஒருமுறை ஒருவர் தனது காருக்கு ஓலை கூரை வேய்ந்திருந்தார். சாலையில் போவோர் வருவோரையெல்லாம் அது கவர்ந்தது. அந்த வகையில் அண்மைக் காலமாக கார்களுக்கு சாணத்தால் மூடாக்கு செய்யும் வழக்கம் இந்தியர்களிடையே அதிகரித்து வருகிறது. குஜராத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய டொயோட்டா கொரல்லோ காருக்கு சாணத்தால் மூடாக்கு அமைத்து வியப்பை அளித்தார். இப்படிச் செய்வதால், வெயிலில் தாக்கம் அதிகரிக்கும் போதெல்லாம் தனது காருக்குள் குளுமை நிலவுவதாக கூறினார். இதனால் காருக்குள் குளர்சாதன வசதிக் கருவிப் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது என்றும் தெரிவித்தார். இதை பின்பற்றி பலரும் தங்களுடைய கார்களுக்கு மாட்டுச் சாணத்தில் மூடாக்கு செய்யத் தொடங்கினர். அவரைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காருக்கு மாட்டுச்சாண மூடாக்கை வழங்கினார். இது அவருக்கு தேசியளவில் புகழைத் தேடித் தந்தது. இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலம் இராய்ப்பூரில் வேறுபாடான போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் பங்கேற்கும் கார் உரிமையாளர்கள், தங்களுடைய வாகனத்தை மற்றவர்களிடம் இருந்து வேறுப்படுத்தி காட்ட வேண்டும் என்பது தான் போட்டியின் நடைமுறை. அவ்வாறு தனித்துவமாக நிலைநிறுத்தப்படும் கார்களுக்கு முடிவில் பரிசுகள் அறிவிக்கப்படும். இந்த மாறுபட்ட போட்டியில் பங்கேற்க பலரும் ஆர்வம் காட்டினர். தங்களுடைய வாகனங்களைத் தனித்துவமாக அடையாளப்படுத்தி காட்டுவதற்கு பல்வேறு வழிமுறைகளை அவர்கள் கையாண்டனர். சிறிய வகைக் கார்கள், ஆடம்பர வகைக் கார்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் என பலரும் இந்த போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதன்படி, இப்போட்டியில் கலந்து கொண்ட உள்ளூர்வாசியான ராஜேஷ் என்பவர் தனது மாருதி காரை மாட்டுச் சாணத்தால் ஒரு அங்குலத்திற்கு மூடாக்கு செய்திருந்தார். போட்டியில் பலருடைய கவனத்தை ஈர்த்த அந்த காருக்கு, தனித்துவம் மிக்க வாகனம் என்கிற பரிசு வழங்கப்பட்டுள்ளது. வெறும் மாட்டுச் சாணத்தால் மட்டும் காரை அலங்கரிக்காமல், பொருட்களை மறுசுழற்சி செய்வதன் அவசியம் மற்றும் முதன்;மைத்துவம் குறித்தும் ராஜேஷ் வலியுறுத்தியிருந்தார். இது போட்டியில் பங்கேற்ற பலருடைய பாராட்டுக்களைப் பெற்றது. முடிவில் ராஜேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். வெற்றியாளர் ராஜேஷ் தனது மாருதி காரை முழுவதுமாக மூடாக்கு செய்வதற்கு 21 கிலோ மாட்டுச் சாணத்தை பயன்படுத்தியுள்ளார். மேலும், சாலையில் காரை ஓட்டிச் செல்லும் போது முன்பை விட சற்று கனம் அதிகமாக இருப்பதை போன்று உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். கார் மீது சாணம் மெழுகப்பட்டால் கேபினுக்குள் உள்ளுக்குள் வெப்பத் தாக்கம் குறையும். வெயில் காலங்களில் இப்படிச் செய்தால குளிர்பதன வசதி இயக்காமலே சாலையில் சென்று வரலாம். விரைவில் கோடை காலம் தொடங்க இருப்பதால், சாணத்தின் தேவை அதிகரிக்கும் என்று ராஜேஷ் தெரிவித்தார். கார்களுக்கு மாட்டுச் சாணத்தால் மூடாக்கு தரும் வழக்கத்தை நிறுவனங்கள் வரவேற்கவில்லை. எனினும், அதை நிறுவனங்கள் எதிர்க்கவும் கிடையாது. மாட்டுச் சாணத்தால் காரை மூடாக்கு செய்வதனால், காருக்குள் குறைந்த வெப்பம் கொஞ்சமாக நிலவும் என்பது உறுதி என்றாலும், காரின் வண்ணப்பூச்சு பாதிக்கப்பட உறுதியாக வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர் வாகன உற்பத்தியாளர்கள். அதற்கு மாற்று தேடுங்கள் சாண ஆர்வலர்களே!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



