Show all

உலகத்திலேயே பெட்ரோல் வணிகத்தில் அதிக இலாபம் ஈட்டும் நாடு இந்தியா! பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளை விடவும்

பெட்ரோல் விளையும் நாடுகள் பொருளாதார வளம் மிக்க நாடுகள் என்பது பழைய கதை. ஆனால் பெட்ரோல் வணிகம் செய்யும் நாடுகள் அதிக ஆதாயம் பார்க்கின்றன என்பதே புதிய செய்தி. அதுவும் அந்த வகையில், இந்தியா உலகின் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் இந்தியாவை வளமிக்க நாடாக மாற்ற இயலாத நிலைக்குக் காரணமாக இருப்பவை- அரசியல்வாதிகளின் கொள்கை மற்றும் கொள்ளையாக மட்டுமே இருக்க முடியும்.

 

12,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகெங்கிலும் உள்ள 100 நாடுகளின் பெட்ரோல் விலைகளில் இந்தியா எங்கு நிற்கிறது என்பதைப் பார்ப்போம். வெவ்வேறு நாடுகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு:-

 

நாட்டின் பெயர் விலை (இந்திய ரூபாயில்)

வெனிசுலா 0.58

சூடான் 23.24

குவைத் 23.64

ஈரான் 24.49

அல்ஜீரியா 24.59

எகிப்து 25.07

ஈக்வடார் 26.60

நைஜீரியா 28.53

சிரியா 29.73

பஹ்ரைன் 36.05

கஜகஸ்தான் 36.45

உஸ்பெகிஸ்தான் 36.52

சவூதி அரேபியா 37.00

கத்தார் 37.37

மலேசியா 37.72

ஓமான் 39.23

ஈராக் 42.97

ஐக்கிய அரபு அமீரகம் 43.90

பர்மா 44.05

இந்தோனேசியா 44.66

எத்தியோப்பியா 46.40

ஆப்கானிஸ்தான் 46.54

பெலாரஸ் 46.75

ரஷ்யா 48.98

துனிசியா 49.80

பாகிஸ்தான் 51.64

கொலம்பியா 54.08

பூட்டான் 57.02

அமெரிக்கா 57.56

லெபனான் 62.51

நமீபியா 62.85

வியட்நாம் 63.27

இலங்கை 63.77

ஜார்ஜியா 64.25

பிஜி 67.98

தைவான் 68.50

நேபாளம் 68.74

மெக்சிகோ 69.10

கானா 69.46

பராகுவே 70.13

பங்களாதேஷ் 71.69

பிலிப்பைன்ஸ் 72.29

கென்யா 73.68

கம்போடியா 73.98

ஆஸ்திரேலியா 74.29

மவுரித்தேனியா 76.75

உக்ரைன் 76.79

அர்ஜென்டினா 77.60

தென்னாப்பிரிக்கா 79.68

கோஸ்ட்டா ரிக்கா 79.72

தாய்லாந்து 79.79

பிரேசில் 80.10

இந்தியா 80.22

சீனா 80.90

மொராக்கோ 81.19

கனடா 81.68

செனகல் 83.84

மடகாஸ்கர் 84.00

பஹாமாஸ் 85.73

கியூபா 86.15

ஜமைக்கா 86.86

பல்கேரியா 87.26

சிலி 88.63

ஜப்பான் 89.31

துருக்கி 91.95

போலந்து 94.36

ஜிம்பாப்வே 94.57

ஏமன் 95.01

ருமேனியா 98.47

ஹங்கேரி 99.27

தென் கொரியா 100.56

ஜோர்டான் 100.68

செக் பிரதிநிதி 100.75

செர்பியா 101.57

ஆஸ்திரியா 101.59

மொரீஷியஸ் 102.85

சைப்ரஸ் 103.76

ஸ்பெயின் 106.16

ஸ்லோவாக்கியா 109.77

உருகுவே 110.06

நியூசிலாந்து 110.90

சுவிட்சர்லாந்து 110.98

சிங்கப்பூர் 111.62

அயர்லாந்து 114.58

ஜெர்மனி 115.46

யுகே 116.34

பெல்ஜியம் 118.83

பின்லாந்து 124.44

பிரான்ஸ் 125.25

சுவீடன் 126.47

போர்ச்சுகல் 126.53

இஸ்ரேல் 127.43

இத்தாலி 128.77

கிரீஸ் 130.70

மொனாக்கோ 131.74

டென்மார்க் 131.99

நெதர்லாந்து 133.50

நோர்வே 139.85

ஹாங்காங் 144.23

ஐஸ்லாந்து 144.52

வெனிசுலாவை விட 138மடங்கு அதிக விலைக்கு பெட்ரோலை வணிகம் செய்கிறது இந்தியா. அதே சமயம் நமக்கு பெட்ரேல் தரும் குவைத்தை விட 3.39மடங்கு அதிக விலைக்கு விற்கிறது இந்தியா.

 

அதே சமயம் உலகிலேயே பெட்ரோல் இறக்குமதி செய்யும் நாடுகளில் நமது இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. குவைத் நமக்கு இந்திய விலையில் 3.39ல் ஒரு பங்கு விலைக்குத் தருவதாகவே வைத்துக் கொண்டால் கூட இந்தியா பெட்ரோல் வாங்கும் விலைக்கு 239 விழுக்காடு இலாபம் வைத்து உள்நாட்டில் பெட்ரோல் விற்பனை செய்கிறது. இதில் போக்குவரத்து, இடைத்தரகு அனைத்து செலவுகளுக்கும் மிக அதிக பட்சமாக 139 விழுக்காடு செலவிட்டு விட்டதாக வைத்துக் கொண்டாலும் இந்தியா உள்நாட்டு பெட்ரோல் வணிகத்தில் 100 விழுக்காடு ஆதாயம் பார்க்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

 

உலகெங்கிலும் உள்ள 100 நாடுகளின் பெட்ரோலுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதிகளில் இந்தியா எங்கு நிற்கிறது என்பதைப் பார்ப்போம். வெவ்வேறு நாடுகளில் பெட்ரோலுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி பீப்பாய்களில்:-

1 சீனா 8,400,000

2 அமெரிக்கா 7,900,000

3 இந்தியா 5,123,000

4 ஜப்பான் 3,147,000

5 தென் கொரியா 2,949,000

6 ஜெர்மனி 1,830,000

7 பிலிப்பைன்ஸ் 1,503,000

8 இத்தாலி 1,346,000

9 ஸ்பெயின் 1,224,000

10 ஐக்கிய இராச்சியம் 1,221,000

11 நெதர்லாந்து 1,204,000

12 பிரான்ஸ் 1,129,000

13 சிங்கப்பூர் 976,100

14 தாய்லாந்து 898,000

15 தைவான் 841,300

16 கனடா 700,000

17 பெல்ஜியம் 618,400

18 கிரீஸ் 468,000

19 போலந்து 467,400

20 ஆஸ்திரேலியா 461,900

21 பெலாரஸ் 433,400

22 தென்னாப்பிரிக்கா 414,000

23 இந்தோனேசியா 391,800

24 துருக்கி 379,600

25 பாகிஸ்தான் 372,800

26 சுவீடன் 352,300

27 பிரேசில் 344,900

28 போர்ச்சுகல் 282,400

29 இஸ்ரேல் 275,600

30 பஹ்ரைன் 243,300

31 பின்லாந்து 236,000

32 அருபா 229,000

33 மலேசியா 200,200

34 சிலி 186,900

35 லிதுவேனியா 181,900

36 ஆஸ்திரியா 173,900

37 கியூபா 160,000

38 மொராக்கோ 148,500

39 செ குடியரசு 131,300

40 பல்கேரியா 128,100

41 கஜகஸ்தான் 118,400

42 ஸ்லோவாக்கியா 117,600

43 ஹங்கேரி 115,300

44 பெரு 110,600

45 ருமேனியா 104,900

46   சுவிட்சர்லாந்து 101,400

47 நியூசிலாந்து 101,200

48 டென்மார்க் 99,690

49 எகிப்து 80,000

50 கோட் டி ஐவோரி 72,860

51 வட கொரியா 70,000

52 அயர்லாந்து 66,490

53 ஜோர்டான் 59,440

54 டிரினிடாட் மற்றும் டொபாகோ 59,180

55 உருகுவே 40,880

56 குரோஷியா 37,300

57 நோர்வே 37,080

58 உக்ரைன் 33,020

59 இலங்கை 32,520

60 கேமரூன் 31,960

61 செர்பியா 31,730

62 ரஷ்யா 29,650

63 ஈரான் 28,140

64 டொமினிக்கன் குடியரசு 26,500

65 பங்களாதேஷ் 25,320

66 கானா 24,200

67 ஜமைக்கா 24,160

68 துனிசியா 22,120

69 போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா 20,040

70 கென்யா 19,830

71 செனகல் 15,560

72 பப்புவா நியூ கினி 14,880

73 சாம்பியா 14,340

74 நிகரகுவா 13,580

75 எல் சல்வடோர் 9,940

76 மெக்சிகோ 9,884

77 அல்ஜீரியா 5,900

78 யு.எஸ். விர்ஜின் தீவுகள் 4,493

79 அல்பேனியா 3,440

80 உஸ்பெகிஸ்தான் 340

81 மாசிடோனியா 146

82 லாட்வியா 140

83 அர்ஜென்டினா 100

84 மியான்மர் 40

 

பெட்ரோல் வணிகத்தில் இந்தியா இவ்வளவு வளமான நிலையில் இருக்கையில்-  மேலும் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில்- ஒன்றிய பாஜக அரசின் திட்டம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

கொரோனா நுண்நச்சு ஏற்படுத்திய தாக்கத்தால், உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளிலும் முதன்மையான தொழிற்சாலைகள் பலவும் மூடப்பட்டன. மேலும் ஏராளமான முன்னணி நிறுவனங்கள் கடும் இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் விளைவால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களும் மற்றும் தனி ஆட்களும் மட்டுமல்லாது, அரசாங்கங்களும் தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. 

 

இந்த வகையில் இந்தியாவில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா அறைகூவலில் இந்திய மாநில அரசுகள் அதிகமான தொகையை தற்போது செலவிட வேண்டியுள்ளது. ஒன்றிய அரசு கொரோனாவிற்கு சாதித்தது ஒன்றும் இல்லையென்றாலும் அதற்கு மக்களிடம், நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் வரி வருவாய் பாதித்துள்ளது.

 

நிவாரண பணிகள் மற்றும் சலுகைகளை வழங்குவதற்கு அதிகப்படியான நிதி தேவைப்படும் நிலையில், வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய மாநில அரசுகள் தடுமாறும் சூழல் உருவாகியுள்ளது. 

 

ஆனால் வரி வருவாய் மட்டும் பாதித்துள்ள ஒன்றிய பாஜக அரசு நெருக்கடிகள் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்துவதற்கு ஒன்றிய பாஜக அரசு தற்போது திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு, லிட்டருக்கு 3 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கலால் வரியை எப்போது உயர்த்துவது? என்பது தொடர்பான இறுதி முடிவு மிக விரைவில் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. 

 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் இதன் பலன் இந்திய மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. 

 

சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த மாதம் சுமார் 45 அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது தற்போது 40 டாலர்களாக குறைந்துள்ளது. ஆனால் ஒன்றிய பாஜக அரசு அதிகப்படியான வரிகளை விதிப்பதால், இதன் உண்மையான பலனை இந்திய மக்கள் அனுபவிக்கவில்லை. 

 

பன்னாட்டு அளவில் பெட்ரோல், டீசல் மீது அதிக வரியை விதிக்கும் நாடுகளில் முதன்மையான நாடக இந்தியா உள்ளது மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்தின அல்லவா?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.