முகநூலின் விளம்பர வருமானம் குறைந்து விட்ட நிலையில், முகநூலின் பங்குகளும் சரிவைச் சந்தித்துள்ளன. 14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: முகநூல் நிறுவனத்திற்கு தற்போது 7.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள விளம்பரங்கள் பறி போய் உள்ளதால் லாபத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது. வெள்ளியன்று முகநூல் நிறுவனத்தின் பங்கு 8.3 விழுக்காடு சரிந்தது குறிப்பிடத்தக்கது. கோககோலா நிறுவனம் கொரோனா ஊரடங்கு காரணமாக தனது சமூக வலைத்தள விளம்பரங்களை வரும் 30 நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதேபோல வெரிசான் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் முகநூலில் விளம்பரம் தருவதை நிறுத்திவிட்டது. முகநூலில் பல உண்மைக்கு மாறான செய்திகள் உலவுவதால் அந்தச் சமூக வலைத்தளத்தில் தாங்கள் விளம்பரம் செய்ய விரும்பவில்லை என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த முடிவை தான் வைபர் நிறுவனமும் எடுத்துள்ள நிலையில், முகநூல் பெரும் சரிவை எதிர்நோக்கியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



