Show all

பெருமிதம்! வலையொளி பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3வது இடம் பிடித்து இருக்கிறது

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வலையொளி பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3வது இடம் பிடித்து இருக்கிறது.

வலையொளி செயலி பயன்பாடு குறித்து வலையொளி நிறுவனத்தின் இந்திய செயல்தலைவர் சத்ய நாராயணா பேட்டி அளித்து இருக்கிறார். உலகிலேயே தமிழர்கள் அதிகம் வலையொளி பயன்படுத்துகிறார்கள் என்றுள்ளார்.

தமிழர்கள் சமையல், பாடல், நகைச்சுவை காணொளிக்கள் அதிகம் பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் தமிழர்கள் பதிவேற்றம் செய்யும் காணொளிகள் அதிகம் தீயெனப் பரவுவதாகக் கூறியுள்ளார்.

தமிழர்களின் கிராமிய சமையல் குறித்த காணொளிகள் உலகளவில் பிரபலமாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ் நாட்டில் பதிவேற்றம் செய்யப்படும் படங்களின் விளம்பரக் காணொளிகள் உலக அளவில் தீயெனப் பரவுதல் குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,716.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.