Show all

யாழ்! திரைப்படத்தில் சிவயநம யநமசிவ மசிவயந மயநமசி நமசிவய பாடல் மிக நன்றாக வந்திருக்கிறது

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119:; தமிழர் பண்பாட்டையும், யாழ்ப்பாணத்தையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் யாழ். 

இதில் இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணத்தின் கதையை முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களைக் கொண்டே சொல்லியிருக்கிறார்களாம். 

மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ். ஆனந்த் தயாரித்துள்ளார்.  

இந்த படத்தில் டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதை தலைவர்களாக நடிக்கிறார்கள். கதைதலைவிகளாக நீலிமா, லீமா, மிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். குழந்தை நட்சத்திரம் ரக்ஷனா மற்றும் ஈழத்து கலைஞர்கள் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு- ஆதி கருப்பையா, நசீர், இசை- எஸ்.என்.அருணகிரி, படத்தொகுப்பு- ட.எ.ம.தாஸ், கலை- ரெம்போன் பால்ராஜ்.

கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம்- எம்.எஸ்.ஆனந்த். படம் பற்றி கூறிய அவர்,

யாழ் திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி. இந்தப் படத்தின் கதை, தொடக்கம் முதல் இறுதிவரை ஈழத்தில் நடக்கிறது. இதில் இந்திய தமிழ் கதாபாத்திரங்கள் எதுவும் கிடையாது. அனைத்தும் ஈழத்தமிழர்களே.

படத்தின் பாடல்கள் ஈழத் தமிழில் இருக்கும். பாடலாசிரியர்களும் ஈழத்தமிழர்களே. வசனம் முழுவதும் ஈழத் தமிழிலேயே இருக்கும்.

யாழ் என்பது ஈழத்தமிழர்கள் பயன்படுத்திய ஒரு இசைக்கருவி. பாணர்கள் தமிழர்களின் கலை, கலாசாரத்தை, பண்பாட்டை ஊர் ஊராக சென்று பரப்பியதால் தான் யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்தது.

யாழ்ப்பாணக் கலாசார கதாபாத்திரங்களுக்கு இடையில் இறுதிப்போரின் போது அவர்களுக்குள் நடந்த நட்பு, காதல் போன்ற சம்பவங்களை எடுத்துள்ளோம் என்றார்.

உணர்ச்சிகரமான வசனங்களை எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். உண்மைச் சம்பவங்களை கலையுணர்வோடு வடிக்கப் பட்டிருக்கிறது. 

சிவயநம யநமசிவ மசிவயந மயநமசி நமசிவய  பாடல் மிக நன்றாக வந்திருக்கிறது. ஊடகங்களின், விளம்பரமோ, ஒத்துழைப்போயில்லாமல் படம் திரைக்கு வந்திருக்கிறது. தேடுதலோடு படம் பார்த்தால் சில விசயங்கள் கிடைக்கும். பார்ப்போமா!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,716. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.