Show all

76இலட்சம் மக்கள் தொகை கொண்ட கட்டலோனியா, தனிநாடு பொது வாக்கெடுப்பில் வெற்றி

கட்டலோனியா ஒரு தன்னாட்சி பெற்ற மாகாணம்;. இதன் தலைநகரம் பார்செலோனா;. இதன் பரப்பளவு 32,114 சதுர கி.மீ. இதன் மக்கட்தொகை 75,04,881.

     இது ஸ்பெயின் (எசுப்பானியா) நாட்டின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. காத்தலோனியா மாகாணத்திற்கு, தனி அரசியலமைப்பு சபை, தனி நாடாளுமன்றம், தனி நாட்டுப்பண், தனி கொடி மற்று முத்திரைகள் கொண்டது.

     காத்தலோனியா எசுப்பானியாவின் நான்கு மாகாணங்களை அடக்கி உள்ளது: பார்செலோனா, கிரோனா, இலைய்டால், தரகோனா. பார்செலோனா இதன் தலைநகரமாகவும் மிகப் பெரிய நகரமாகவும் விளங்குகின்றது; எசுப்பானியாவின் இரண்டாவது பெரிய நகரமாகவும் ஐரோப்பாவின் பெரும் பெருநகரப் பகுதிகளில் ஒன்றாகவும் உள்ளது.

     இப்பகுதியில் காத்தலான், எசுப்பானியம் மற்றும் ஆக்சிதத்தின் அரணிய மொழியும் அலுவல்முறை மொழிகளாக விளங்குகின்றன.

     ஸ்பெயின் நாட்டில் வளம் மிகுந்த பகுதியான கட்டலோனியா தொடர்ந்து தனிநாடு கோரிக்கை வைத்து வந்தது. ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கட்டலோனியா பகுதியிலிருந்து கிடைக்கிறது. ஸ்பெயின் அரசாங்கம் இவர்களது கோரிக்கையை நிராகரித்து வந்தது. இந்நிலையில் கட்டலோனிய மாநில அரசு தனிநாடு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்துவது என முடிவு செய்தது.   அம்மாநில அரசு நடத்திய வாக்கெடுப்பில் 90விழுக்காடு கட்டலோனிய மக்கள் ஸ்பெயினிலிருந்து வெளியேற ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.

     ஸ்பெயின் அரசு இந்தப் பொது வாக்கெடுப்பு நடத்தக் கூடாது எனத் தடை விதித்திருந்தது. ஆனால், கட்டலோனிய அரசு தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்துவோம் என்றது. இதையடுத்து நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், இந்த வாக்கெடுப்பில் ஸ்பெயின் அரசு, காவல்துறை மூலம் முடக்க, வாக்களிக்க வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.

     இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். ஸ்பெயினின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக உலக நாடுகள் பல கருத்து தெரிவித்தனர்.

     நேற்று நடந்த பார்சிலோனா கால்பந்து போட்டியில் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய பெரிய மைதானத்தில், ஒரு ரசிகர்கூட இல்லாமல் நேற்றைய போட்டி நடந்தது.

     வாக்கெடுப்பில், 90விழுக்காடு கட்டலோனிய மக்கள் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனிநாடு வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

     ஸ்பெயின் நாட்டின் மொழி எசுப்பானிய மொழி. இது உலகில் இரண்டாவது அதிகம் பேசப்படும் மொழியாகும். இந்நாட்டில் ஐரோப்பிய யூரோ நாணயம் பொதுப் பயன்பாட்டில் உள்ளது. பார்சிலோனா இங்குள்ள மற்றொரு பெரிய நகரமாகும்.

     எசுப்பானியர் தமது நாட்டை எஸ்ப்பானா என்று அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் இதை ஸ்பெயின் என அழைப்பர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.