லதா ரஜினிகாந்த் சமீபகாலமாக குழந்தைக்களுக்கு நடக்கும் சமூக குற்றங்களான பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர் முறை போன்றவற்றிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கு ஸ்ரீதயா அறக்கட்டளை மூலம் குரல் கொடுத்து வருகிறார். இதற்காக இந்திய அளவிலான நடை பயணத்தை சமீபத்தில் தொடங்கி வைத்தார். இன்று, ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் உரிமையாளரும், ரஜினியின் மனைவியுமான லதா கலந்துக் கொண்டு பேசுகையில், ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எல்லா வகையிலும் நல்லது செய்வார். நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் ரஜினிகாந்த்தின் மனதில் இருக்கும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அவருக்குத்தான் தெரியும்’ என்றார். நடிகர்கள் கமலும், ரஜினியும் சமீபகாலமாக அரசியலைப் பற்றி பேசி வருகிறார்கள். இவர்களில் யார் முதலில் அரசியலுக்கு வருவார் என்று பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில், ரஜினியின் மனைவி லதா, ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார் என்று கூறியிருக்கிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



