கிழக்காசிய நாடான சீனாவில் ‘ஐபோன்’
வாங்க, பிறந்து 18 நாளே ஆன பச்சிளம் குழந்தையை விற்ற, பாசக்கார
தாய், கணவருடன் கைது செய்யப்பட்டார். சீனாவின், புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர்,
தன், 18 நாள் குழந்தையை விற்பதாக, சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்தார். அதைப் பார்த்த
ஒருவர், 2.40 லட்சம் ரூபாய் கொடுத்து, அக்குழந்தையை வாங்கிச் சென்றுள்ளார். இதுகுறித்து
விசாரணை நடத்திய காவல்துறையினர், இளம் தம்பதியைக் கைது செய்தனர். அவர்களிடம் நடந்த
விசாரணையில், ஐபோன் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்க, குழந்தையை விற்றது தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணவனுக்கு மூன்று ஆண்டும், மனைவிக்கு இரண்டரை
ஆண்டும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சீனாவில், ஆண்டுதோறும், இரண்டு லட்சம்
குழந்தைகள் கடத்தப்பட்டு, ‘ஆன்லைன்’மூலம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



