காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் சேரன் மற்றும்
அவரின் மகளுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் சேரனின் சினிமா2கோம் என்ற திட்டத்தில்,
ராமநாதபுரம் பழனியப்பன் என்பவர் சேர்ந்திருந்திருந்ததாகவும், அதற்கென 8 லட்சத்து
40 ஆயிரம் ரூபாய் சேரனிடம் செலுத்தியிருந்தாகவும், ஆனால் எதிர்பார்த்த அளவில் சினிமா2கோம் லாபம் தராத நிலையில், பழனியப்பன் தான் செலுத்திய தொகையை திரும்ப கொடுக்கும்படி
சேரனிடம் கேட்க, இதனையடுத்து சேரன், பழனியப்பனுக்கு 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான
காசோலை வழங்கியுள்ளார். ஆனால், அந்தக் காசோலை வங்கியில் பணம் இல்லை என்று
திரும்ப வந்துள்ளது. இதனால் பழனியப்பன்; நீதிமன்றம் சென்றுள்ளார். இது
தொடர்பான வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி
மார்ச் 10-ம் தேதி சேரன் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது. நீதிமன்றம் குறிப்பிட்டபடி சேரன் இன்று நேரில் ஆஜராகவில்லை.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி வேலுச்சாமி, சேரன் மற்றும் அவரின் மகள் நிவேதா
பிரியதர்சினிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, வழக்கை வரும் ஏப்ரல் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



