பிரபாகரன் 66வது பிறந்த நாளை நேற்று அணிச்சல் (கேக்) வெட்டி கொண்டாடினர் சீமான், வேல்முருகன், திருமாவளவன் ஆகியோர். கீச்சுவில் தேசியத்தலைவர்66 நேற்று தலைப்பானது. 12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 66-வது பிறந்த நாள் நேற்று உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66-வது பிறந்த நாளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ஆகியோர் அணிச்சல் வெட்டி கொண்டாடினர். தமிழகத்திலும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் பிரபாகரனின் பிறந்த நாளை நிவர் புயலுக்கு நடுவே கொண்டாடின. தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கட்சியினருடன் அணிச்சல் வெட்டி கொண்டாடினார். சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டினார். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பிரபாகரன் பிறந்த நாள் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பிரமாண்ட அணிச்சல் வெட்டப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டு பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களிலும் தேசியத்தலைவர்66 நேற்று தலைப்பானது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



