Show all

நாளை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட இருப்பவர் யார்!

முதல் வெளியேற்றம் ரேகாவில் இருந்து கடந்த கிழமை வெளியேறிய சுச்சி வரைக்கும் தொடர்ந்து பிக் பாஸ் வெளியேற்றத் தகவல் முன்னதாகவே கசிந்தே வருகிறது.

13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தக் கிழமை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் என்கிற தகவல் சமூக வலைதளங்களில் தீயாகி வருகிறது.

இந்தக் கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்தக் கிழமை சம்யுக்தா வெளியேற வாய்ப்பில்லை. அவருக்கு அதிகமான ஓட்டுக்கள் குவிந்துள்ளன என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளையான நிசாவும் இந்தக் கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற மாட்டார் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன. ஆனால், பெரும்பாலான பிக்பாஸ் கொண்டாடிகள் நிசா அல்லது சம்யுக்தா வெளியேறுவார்கள் என்று எதிர்பார்த்தனர்.

பிக் பாஸ் வீட்டில், எந்தக் கவலையும் இல்லாமல், சுகமா படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் ஜித்தன் ரமேஷ் தான் இந்த கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.

இந்தக் கிழமை அபாய எல்லையில் இருப்பவர்கள் என்றால், அது ஜித்தன் ரமேஷ், சம்யுக்தா மற்றும் நிசா தான். சம்யுக்தாவுக்கு சிவானி மற்றும் பாலா கொண்டாடிகள் ஆதரவு அதிகம் உள்ளது. நிசாவுக்கு விஜய் தொலைக்காட்சியின் மிகப்பெரிய ஆதரவே இருக்கு, ஜித்தன் ரமேஷ் தான் கண்டிப்பாக இந்தக் கிழமை வெளியேற்றப்படுவார் என ஏகப்பட்ட பேர் கணித்தும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் தலைவர் போட்டிக்குத் தேர்வான மூன்று பேரில் ஜித்தன் ரமேசும் ஒருவர். இரம்யா பாண்டியன், பாலாஜி முருகதாஸ் ஆகிய இருவரில், அதிகபட்சமாக அடுத்த கிழமை தலைவராக பாலாஜி தான் ஆவார் என்று தெரிகிறது. 

பிக் பாஸ் வீட்டில் பெரிய அளவில் சண்டை போடாமல், அடுத்த வரை காயப்படுத்தாமல், எல்லா சிக்கல்கள் பற்றி தெரிந்தாலும், தேவையில்லாமல் மூக்கை நுழைக்காமல் ஜித்தன் ரமேஷ் பாதுகாப்பு விளையாட்டை முன்னெடுத்து வந்தார். இந்த நிலையில் ஜித்தன் ரமேஷ் குறைந்த வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல் பரவி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.