Show all

ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியாக வேண்டுமாம்! சுப்பிரமணிய சுவாமியின் தொடர் அறிவாளித்தனம்

12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சவுக்கு இந்தியாவின் மிகஉயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர் ராஜபக்சேமீது தீவிர பாசம் கொண்டவர். அடிக்கடி தனிப்பட்ட முறையில் இலங்கை சென்று அவரை சந்தித்துவிட்டு வருகிறவர். இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஆதிக்க சக்திகளின் சிறந்த அறிவாளர். நடுவண் அரசில், எந்த ஆட்சி அமைந்தாலும், இவர் அறிவாளித்தனம்,            ஆதிக்க சக்திகளின் இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான விசயங்களில் மிளிரும்.

விடுதலைப்புலிகள், அவர்களோடு லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்பதை சிலகாலமாகவே, அதிகமாக வலியுறுத்தி வருகிறார் சுப்பிரமணியசாமி. இப்போது இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

காரணம், டெல்லியில் அடுத்த கிழமை, இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஆதிக்க சக்தி விராத் ஹிந்துஸ்தான் சங்கம் சார்பில் ஒரு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் ராஜபக்சே கலந்து கொள்கிறார். இதற்காகவே போன கிழமை சுப்பிரமணிய சாமி இலங்கை சென்று ராஜபக்சேவை நேரில் சந்தித்து இந்த விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு வந்தார்.

இந்நிலையில், தனது கீச்;சுப் பக்கத்தில், 'விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை மற்றும் இந்திய நாட்டு மக்களை காப்பாற்றிய மகிந்த ராஜபக்சவுக்கு, 

மக்களின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்' சுப்பிரமணிய சாமி பதிவிட்டுள்ளார். சுப்பிரமணியசாமியின் இந்த கருத்துக்கு உலகம் முழுவதிலிருந்து வழக்கம்போல் கண்டனங்கள் குவியத் தொடங்கிவிட்டன!

ஒரே திட்டத்தின் மூலம்: ராஜிவ் படுகொலைக்கும், ஈழத்தில் தமிழ் மக்கள் கொன்றொழிப்புக்கும், இந்தியாவில் மற்றும் உலகத்தில் விடுதலை புலிகள் மீதான எதிர் வினைகளுக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கைகளை அதிகாரிகள் மூலம் பயன் படுத்திக் கொண்டவர்கள் தாம் சுப்பிரமணிய சுவாமி, மற்றும் சந்திரசாமி கூட்டணி என்பதை ராஜிவ் கொலை விசாரணை தொடங்கியதிலிருந்து திருச்சி வேலு அவர்கள் தெரிவித்து வருகிறார்கள். அதற்காக ஒரு நூலும் வெளியிட்டு பல்வேறு கருத்துப் பரப்புக் கூட்டங்களும் நடத்தினார்கள். 

ஒரே மர்மமாகவே முடித்துக் கொள்ளப்பட்ட ராஜிவ் படுகொலைக்கும் இவர்களுக்கும், திருச்சி வேலு அவர்கள் தெரிவித்து வருவது போல, தொடர்பிருக்கிறது என்பதற்கு, ராஜபக்சவுக்கு இந்தியாவின் மிகஉயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்கிற வேண்டுகோள் உறுதிப் படுத்துவதாகிறது.

இந்திய வெளியுறவுக் கொள்கையை, இந்தியக்கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்ற முறையில், கையாளுகிற ஆட்சி நடுவண் அரசில் அமையும் வரை ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் தங்களுக்குள் இந்;தியாவின் பெரிய பெரிய விருதெல்லாம் துணிச்சலாக கேட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதை, திருச்சி வேலு அவர்களின் நூலை படித்தால் புரிந்து கொள்ள முடிகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,893.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.