Show all

மீண்டும் ஒரு சவுதி அரசருக்கு கடுமையான தண்டனை நிறைவேற்றம்

சவுதி அரேபியாவில் தற்போது ஆளும் அரச குடும்பத்தின் இளவரசருக்கு, சிறையில் கடுமையான சாட்டையடிகள் வழங்கப்பட்டுள்ளதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்கள் முன்பு, கொலை குற்றத்தில் கைது செயப்பட்ட சவுதி அரசக் குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் சவுதியின் ஆளும் ‘அல் சவுத்’ என்னும் அரசக் குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு ஜெட்டாவில் உள்ள சிறையில் நீதிமன்ற உத்தரவுப்படி கடுமையான கசையடிகள் வழங்கப்பட்டுள்ளதாக ழுமயண சவுதி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இளவரசர் எந்த குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டார் என்பது குறிப்பிடப்படவில்லை. இந்தச் சம்பவம் சவுதியின் கடுமையான சட்டதிட்டங்களை மீண்டுமொருமுறை உலகுக்கு நினைவுப்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.