உலகின் மிகப்பெரிய மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பிட்காசின் மீதான முதலீடு- இந்திய முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 28,தை,தமிழ்த்தொடராண்டு-5122: அண்மைக்காலமாக ஏறுமுகத்தில் இருந்து வருகிற பிட்காசின் மீது உலகின் மிகப்பெரிய மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்து மேலும் அதன் வளர்ச்சியைக் கூட்டியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த 24 மணிநேரத்தில் இந்திய எண்ணிமச் செலாவணி தளத்தில் முதலீட்டுக்கான கோரிக்கை எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. டெஸ்லாவின் பிட்காசின் மீதான முதலீடு இந்திய முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். எண்ணிமச் செலாவணித் (கிரிப்டோகரன்சி) தளங்களில் இருக்கும் முதலீட்டாளர்கள் திடீரென அதிக எண்ணிக்கையில் பிட்காசு வங்கிட கோரிக்கைகள் வைக்கத் தொடங்கியதால் பரிமாற்றங்கள் முழுமை அடைய காலத் தாமதம் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்தியச் சந்தையில் இருக்கும் எண்ணிமச் செலாவணி (கிரிப்டோகரன்சி) வர்த்தகச் சந்தையில் அதிகளவிலான முதலீட்டாளர்கள் இல்லாத நிலையில் திடீரென முதலீட்டாளர்கள் வந்த காரணத்தால் இத்தளத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.