Show all

தடுப்பூசியும் இணைந்த நிலையில், தமிழகம் விரைவில் விடுதலை பெறும் கொரோனாவிலிருந்து!

தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி நடைமுறைக்கு முன்பாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துகொண்டே வந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

29,தை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக நலங்குத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 618 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் 63 ஆயிரம் நலங்குப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் 7 ஆயிரத்து 727 நலங்குப்பணியாளர் மற்றும் 3 ஆயிரத்து 941 முன்கள பணியாளர்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 768 பேருக்கு கோவிசீல்டு தடுப்பு மருந்தும், 133 நலங்குப்பணியாளர்கள் மற்றும் 14 முன்கள பணியாளர் என மொத்தம் 147 பேருக்கு கோவேக்சின் தடுப்பு மருந்தும் என நேற்று மொத்தம் 11 ஆயிரத்து 815 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி நடைமுறைக்கு முன்பாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துகொண்டே வந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தடுப்பூசியும் இணைந்த நிலையில், தமிழகம் விரைவில் விடுதலை பெறும் கொரோனாவிலிருந்து என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாகும். 

இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் இத்தகு முன்னேற்றம் அடைந்திருப்பதற்கு முதன்மைக்காரணம், பெரும்பான்மை தமிழர்களின் உணவுப்பழக்கம் வழங்கும் நோய் எதிர்ப்பாற்றல், கொரோனா நடைமுறைகளுக்கு தமிழக மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு, மிகச் சிறப்பாக மருத்துத் துறையினர், நலங்குப் பணியாளர்கள் முதன்மைக் காரணம் ஆவர். 

வடஇந்திய போலவெல்லாம், மக்கள் துன்ப காலங்களில் ஒத்துழைப்பு அளிக்காமலே வடஇந்தியாவில் பாஜக நிற்பது போல- தமிழகத்தில் நிற்க முடியாது என்கிற நிலையை நன்றாகப் புரிந்து கொண்டு கொரோனா காலத்தில் செயலாற்றிய தமிழக அரசு பாராட்டிற்குரியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.