Show all

இனி முகநூலில் இருந்து நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

முகநூலில் இருந்தே நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது அந்த நிறுவனம்.

      இதற்காகவே பிரத்யேகமாக வேலைத்தலைப்பை முகநூலில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்களாம். இதன் மூலம் வேலை தேடுவோர் முகநூலில் இருந்து நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விரைவில் இந்த வசதி பரவலாக்கப்படும் என்று கூறப்படுகிறது.  

      தொழில் செய்வோர் மற்றும் வேலை தேடுவோர் எங்கள் வலைதளத்தை வேலைக்கு ஆள் எடுப்பதற்கும் வேலை தேடுவதற்கும் ஏற்கெனவே பயன்படுத்தி வருகிறார்கள். இனி அந்த வசதியை நேரடியாக அனுபவிக்கவே இந்த புது வசதி. என்று முகநூல்; நிறுவனம் கூறியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.