மணிப்பூர் சட்டமன்றத்
தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள சமூக சேவகி இரோம் ஷர்மிளாவிற்கு பாரதிய ஜனதா கட்சி
36 கோடி ரூபாய் பணம் தந்துள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரிக்க வேண்டும் என தேர்தல்
ஆணையத்திடம் காங்கிரஸ் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரும்பு மங்கை இரோம் ஷர்மிளா தனது பல ஆண்டு போராட்டத்தை
கைவிட்டு, மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தேர்தலில் போட்டியிட 36 கோடி ரூபாய்
தேவைப்படும் என்றும், அதனை அவர் திரட்ட முடியாத பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சியே அதனை
தர தயாராக இருப்பதாகவும் பாஜக தலைவர் ஒருவர் இரோம் ஷர்மிளாவிடம் தெரிவித்துள்ளார். இதனை இரோம் ஷர்மிளாவே செய்தியாளர்களிடம் தெரிவித்த
நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சார்பாக,
தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



