Show all

அமித்சா மீது அமெரிக்காவின் நடவடிக்கை பாயுமா! நடவடிக்கைக்கு, அமெரிக்க அரசு ஆணையம் பரிந்துரை

இந்தியாவை படிப்படியாக ஹிந்துத்துவா நாடாக மாற்றும் முயற்சியில்- இந்திய அரசில் ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள பாஜக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில்- திருத்தப்பட்ட குடியுரிமை சட்டமுன்வரைவு பாஜக அரசின் மதவாத நோக்கம் உறுதியானதுதான் என்பதை தெரிவிப்பதாக இருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம் எதிர்நடவடிக்கைக்கு அமெரிக்காவிற்கு பரிந்துரைத்துள்ளது.

25,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருத்தப்பட்ட குடியுரிமை சட்டமுன்வரைவை அறிமுகப்படுத்தியதற்காக, அமித்சா மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம், பரிந்துரைத்துள்ளது.

12 மணி நேர விவாதங்களுக்குப் பிறகு, திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவிற்கு மக்களவையில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த நிலையில்- இந்திய அரசு, குடியுரிமை வழங்க மதத்தைக் கையில் எடுத்துள்ளதாக  கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம், இது பல லட்ச முஸ்லிம்களின் குடியுரிமை பறிபோக வழிவகுக்கும் என கூறியுள்ளது. 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா ஒப்புதல் பெற்றால், அமித்சாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிபர் டிரம்ப் மற்றும் நாடாளுமன்றம், வெளியுறவு அமைச்சருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம், பரிந்துரை செய்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,363. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.