மூக்குத்தி அம்மன் படத்திற்காக நயன்தாரா- அம்மன் திருவிழாக் காலத்து காப்புகட்டு நடைமுறைகளைப் பின்பற்றி வருவதால், திருச்செந்தூர் முருகனை வணங்க கோயிலுக்கு வந்திருந்தார். கொஞ்ச நேரம், பக்தி தளத்திலிருந்து கலைஆர்வத் தளத்திற்கு மடைமாறிய பொதுமக்களால், பரபரப்பு ஏற்பட்டது. 25,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் கதை இயக்கத்தில் உருவாகவுள்ளது மூக்குத்தி அம்மன் திரைப்படம். இந்த அம்மன் படத்திற்கான படக்குழுவினர் அனைவரும் சைவ உணவுப்பழக்கத்திற்கு மாறி உள்ளதாகவும், இந்தப் படத்தில் நடிக்கும் காரணமாக, நடிகை நயன்தாரா அம்மன் திருவிழாக் காலத்து காப்புகட்டு நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாகவும், தகவல்கள் வெளியாகின. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்தத் திரைப்படத்தின் பூசையிலும், படப்பிடிப்பிலும் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. அந்த நேரத்தில் அமெரிக்காவில் அவர், தேங்ஸ் கிவிங் டே கொண்டாடிய காணொளி இணையத்தில் தீயானது. மூக்குத்தி அம்மன் படத்திற்காக, அம்மன் திருவிழாக் காலத்து காப்புகட்டு நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாகச் சொன்னாங்க என இணைய ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மனை வணங்கினர். இதற்காக, அவர்கள் இருவரும் ஒரே காரில் திருச்செந்தூர் வந்தனர். தேவர்குடில் வரை காரில் வந்த அவர்கள், அங்கிருந்து மின்கல காரில் கோயில் வாசலுக்கு வந்தனர். கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூசை நடந்து கொண்டிருந்ததால், இருவரும் ஒரு மணி நேரம் வரை காரில் அமர்ந்திருந்தனர். பின்னர், சிறப்புபூசைக்குப் பிறகு, இருவரும் கோயிலுக்குள் சென்று மூலவர் முருகனை வணங்கினர். கோயிலுக்கு உள்ளேயும், வெளியிலும் நயன்தாராவைக் காண திரண்ட மக்கள்- கொஞ்ச நேரம், பக்தி தளத்திலிருந்து கலைஆர்வத் தளத்திற்கு மடைமாறினார்கள். திரைஆர்வலர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு காரில் அங்கிருந்து ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். திரைஆர்வலர்களின் கூட்டத்தால் கோயிலில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,363.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



