கொரோனா நுண்நச்சுத் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள தடுப்பூசி இந்தியாவில் அடுத்த மூன்று மாதங்களில் கிடைக்கும். 07,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய மருந்து நிறுவனமான, சீரம் இன்ஸ்டிடியூட் நம்பிக்கை தெரிவித்துள்ளது- ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இந்தியாவில் இன்னும் மூன்று மாதங்களில் ரூ.1000 விலையில் கிடைக்கும் என்பதாக. கொரோனா நுண்நச்சுத் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மூன்று மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும், இந்த தடுப்பூசி ரூ .1,000 விலையில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்தூள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



