நிலவிற்கு ஆளில்லாத விண்கலம் அனுப்புகிறது சீனா. 51 ஆண்டுகளுக்கு முன்பு மனிதனை நிலவுக்கு அனுப்பிய புவியிலிருந்து. 51 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் நிலவுக்கு அனுப்பப்பட்டது உண்மைதானா என்கிற கேள்வியோடு. 07,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: நாற்பத்தி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகச் சீனா நிலவிலிருந்து பாறை கற்களை ஆராய்ச்சிக்கு எடுத்து வரப்போகிறது. செவ்வாய்க் கிழமை அன்று திங்கள் கோளுக்கு ஆளில்லாத விண்கலத்தைச் செலுத்தி நிலவில் உள்ள பாறைகளைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது சீனா. இதன்மூலம் நிலவின் உருவாக்கமும், தன்மையையும் புரிந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப் படுகின்றது. இதற்கு முன்பு இந்தப் பணிக்காக நாற்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ஒன்றியத்தால் ஹலூனா என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சீனாவின் நடப்புத் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் அமெரிக்கா ரஷ்யாவிற்கு பிறகு நிலவில் உள்ள பாறைகளை ஆராய்ச்சி செய்யும் மூன்றாவது நாடு சீனா என்ற பெருமையைப் பெறும். இந்தத் திட்டத்தின் மூலம் நிலவிலிருந்து 2கிலோ பாறை கற்களை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாற்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்ட விண்கலம் 170கிராம் கற்களையும், அப்போலோ விண்கலம் மூலம் மனிதர்கள் அனுப்பி வைக்கப்பட்ட திட்டத்தில் 382 கிலோ கிராம் பாறைகள் மற்றும் மணலையும் கொண்டு வந்தனர். இந்த அப்போலோ விண்கலம் குறித்து இன்று வரை ஐயம் கிளப்பப் பட்டு வருகிறது. அப்போலோ விண்கலம் நிலாவிற்கு அனுப்பப் பட்டதாகச் சொல்வது உண்மையல்ல. அது அமெரிக்காவிலேயே நிலா ஒப்பனையில் எடுக்கப்பட்ட படப்பிடிப்பு. நிலவிற்கு போனதாகச் சொல்லப்பட்ட நீல் ஆம்ஸ்ட்ராங், புஷ் ஆல்டிரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர்கள். என்றெல்லாம் பேச்சு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ஐம்பத்தியோரு ஆண்டுகளுக்கு முன்பு நிலாவிற்கு மனிதனை அனுப்பிய அந்தச் செயல்பாடு ஒற்றை முறையோடு முடித்துக் கொள்ளப்பட்டதில் நிறையபோருக்கு உண்மை என்று நம்பத் தோன்றவில்லை. ஒரு வெற்றிப்படம் எடுத்தாலே இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் நான்காம் பாகம் என்று தொடரும் நிலை உலகம் முழுவதும் வாடிக்கையாக இருக்கிற நிலையில், ஒரு வெற்றிப்பயணத்தை ஒற்றைதடவையில் முடித்துக் கொள்வது எப்படி சாத்தியம்; என்ற கேள்வி தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக அமெரிக்காவின் கொடி, நிலவில் நாட்டப்பட்டதாக கொண்டாடும் படத்தில், கொடி அசையும் நிலை பதிவாகியிருக்கும். காற்று இல்லாத நிலவில் இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் தொடர்ந்த வண்ணமே யுள்ளது. இந்த ஆய்வை துறை சார்ந்தவர்கள் யாராவது உலக அளவில் முன்னெடுத்தாலே உண்மை உலகிற்கு தெரியவரும். இப்போதைக்கு இது இருக்கட்டும். செவ்வாய்க் கிழமை அனுப்பட உள்ள சீன விண்கலம் மூலம், நிலவில் எரிமலைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது எவ்வாறு என்பது குறித்த விளக்கத்தையும், எந்த உயிரையும் சூரியனின் கதிர்வீச்சிலிருந்து காக்கும் காந்த அலை எவ்வாறு சிதறியடிக்கப்படுகிறது என்பது குறித்த விளக்கத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



