Show all

தவறான நோக்கம் ஏதும் இன்மை காரணம் பற்றி! ஒன்றிய உள்துறை அமைச்சர் மீது பதாகை வீசியவர் விடுவிப்பு

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா மீது பதாகை வீசியவர் விடுவிக்கப்பட்டார். விசாரணையில் தவறான நோக்கம் எதுவும் இல்லாத காரணத்தால் காவல்துறையினர் அவரை விடுவித்தனர்.

07,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா 2 நாள் பயணமாக நேற்று பிற்பகல் சென்னை வந்தார். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவர் 300 மீட்டர் தூரம் நடந்து வந்தார்.

அப்போது மெட்ரோ தொடர்வண்டி பாலத்துக்கு கீழே கூட்டத்தினருடன் நின்று கொண்டிருந்த ஒருவர், திடீரென தனது கையில் வைத்திருந்த அட்டை பதாகையை அமித்சாவை நோக்கி தூக்கி எறிந்தார். அது கூட்டத்துக்கு உள்ளேயே விழுந்துவிட்டது. இதைப் பார்த்த காவல்துறையினர், அந்த ஆளை சுற்றிவளைத்து பிடித்து பரங்கிமலை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
  
விசாரணையில், அவர் நங்கநல்லூரைச் சேர்ந்த 67 அகவை துரைராஜ் என்பதும், மது அருந்தி இருந்ததும் தெரியவந்தது. அவர் வீசி எறிந்த பதாகையில் அமித்சாவை வரவேற்கும் விதமான கருத்துக்களே இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு தவறான நோக்கம் எதுவும் இல்லாத காரணத்தால் காவல்துறையினர் அவரை விடுவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.