அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும்- ‘என் கல்வி என் உரிமை’ என்பதை நிலை நாட்ட முயலாமல் பதவி சுகத்திற்காக மோடி அரசுக்கு மண்டியிட்டு நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதித்த காரணத்தால்- அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டு நீட் போராளியாக முளைத்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு குழுமூரில் அவரது வீடு அருகே உள்ள திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை பாஜக அலுவலகத்தில் இருந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் நீட் போராளி அனிதாவின் மரணம் குறித்து கருத்து கேட்க செய்தியாளர்கள் முற்பட்டனர். அவர் எந்த கருத்தையும் கூறாமல் வேகமாக சொகுசுந்தில் ஏறி தப்பிச் சென்று விட்டார். தமிழகம் முழுவதும் பாஜக அலுவலகங்களுக்கு பாதுகாப்பு போட்டுள்ளது எடப்பாடி அரசு.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



