கோவை ஈச்சனாரியில், கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தின் அகில இந்தியப் பொருளாளர் தங்கவேல் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன், ஓட்டுக்காகப் பணம் பெற்றுக்கொண்டு திருடர்களை அனுமதித்து விட்டோம். அரசியல் சூழலை இப்படியே விட்டுவைக்காமல் மாற்ற வேண்டியது நம் கடமை. நாம் நம்முடைய வேலையைச் செய்வோம். என்றைக்காவது நமக்குத் தேவை வரும். அப்போது கோட்டையை நோக்கிப் புறப்படுவோம். உங்கள் கையை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். தமிழகத்தைச் தூய்மையாக வைக்கப் போராடுவோம். இந்தச் சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. என்னைப் பார்த்து தலைமை ஏற்க தைரியம் வந்துவிட்டதா என்று கேட்கிறார்கள். உங்களுக்குத் தலைமை ஏற்கத் தைரியம் வந்துவிட்டதா என்று நான் கேட்கிறேன் என்று பேசியிருந்தார். தமிழக பாஜக மாநிலத் தலைவர் ஹிந்திஇசை சௌந்தரராஜன் தனது முகநூல் பக்கத்தில், கோட்டையை நோக்கிய மனக்கோட்டையை கீச்சில் கட்டினால் என்ன கோவையில் கட்டினால் என்ன? திரைத் துறையைக் கோட்டைவிட்ட பின் வேறென்ன கோட்டை கட்ட? என்று பதிவிட்டுள்ளார். ஏன் ஹிந்திஇசைக்கு கமல் மீது இவ்வளவு கோபம்!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



