முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நீட் தேர்வு தடை செய்வது தொடர்பாக சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு போராட்டம் ஆரம்பம் என வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இந்த வதந்தியை நம்ப வேண்டாம். ஏனெனில் மெரீனா கடற்கரையில் போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த அனுமதி அளிக்கப்படுவதில்லை. இதையும் மீறி மெரீனாவில் போராட்டம் நடத்த முற்பட்டால், அது சட்டப்படி குற்றமாகும். எனவே மெரீனாவில் சட்டத்தை மீறி போராட்டம் நடத்த முயன்றால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல சமூக ஊடகங்களில் போராட்டத்துக்கு அழைப்பு விடுப்பது போன்ற செய்திகளை பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



