Show all

சடுதி வண்டி கிடைக்காததால் இளம் நடிகை மரணமா! நம்ப முடியாத சோகம். இதுவா வட இந்தியா?

பிரசவத்தின்போது நேர்ந்த அவலம். சரியான நேரத்தில் சடுதி வண்டி கிடைக்காததால் இளம் நடிகை மரணமாம். இவ்வளவு வாய்ப்புகள் குறைந்த பகுதியா வடஇந்தியா.

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பூஜா சுன்ஜார். திரைப்பட நடிகையான இவர் சில மராட்டிய படங்களில் நடித்துள்ளார். கர்ப்பமாக இருந்த காரணத்தால் கடந்த சில மாதங்களாக திரைப்படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த பூஜா, தனது சொந்த ஊரான ஹிங்கோலியில் ஓய்வெடுத்து வந்தார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரது உறவினர்கள் கோரேகானில் உள்ள தொடக்க சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பிறந்த குழந்தை, ஒருசில நிமிடங்களில் உயிரிழந்ததாம்.

இதையடுத்து பூஜாவின் உடல் நிலையும் மோசமடைந்ததை உணர்ந்த மருத்துவர்கள், அவரை உடனடியாக ஹிங்கோலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஹிங்கோலிக்கு செல்ல, அவரது உறவினர்கள் சடுதி வண்டியைத் தேடி அலைந்தார்களாம். சுமார் ஒரு மணி நேரமாகக் காத்திருந்த பின் சடுதி வண்டி கிடைத்துள்ளது. இதனையடுத்து சடுதிவண்டி  மூலம் பூஜாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பூஜா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தமிழக மக்களால் நம்பவே முடியவில்லை. இவ்வளவு வாய்ப்புகள் குறைந்த பகுதியா வடஇந்தியா? மலைக்கின்றனர் தமிழர்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,314.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.