நேற்று மாலைத்தீவிலிருந்து வந்த 6 பேருக்கும், மகாராஷ்டிராவிலிருந்து வந்த 40 பேருக்கும் குஜராத்திலிருந்து வந்த 2 பேருக்கும், கர்நாடகாவிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்நாட்டில் ஏற்கெனவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த கிழமையில் வெளிமாநிலங்களில், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலமும் தற்போது கணிசமாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த கிழமையில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாடு வந்துள்ளனர். இதனால் மேலும் பாதிப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 108ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 359 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,599 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலைத்தீவிலிருந்து வந்த 6 பேருக்கும், மகாராஷ்டிராவிலிருந்து வந்த 40 பேருக்கும் குஜராத்திலிருந்து வந்த 2 பேருக்கும், கர்நாடகாவிலிருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. 7 ஆயிரத்து 435 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



