கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ படத்தையும் திரையரங்குகளுக்குப் பதிலாக எண்ணிமமேடையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நாளது 5,ஆனி வெள்ளிக் கிழமை (ஜூன் 19) நேரடியாக வெளியீடு செய்ய உள்ளதாக படக்குழு அதிகாரப்பாடாக அறிவித்துள்ளது. 03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தை, கொரோனா ஊரடங்கு காரணமாக தயாரிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் திரைமேடையில் வெளியிட முடியாமல் இருக்கிறது. அதன் காரணமாகவும், இனி வரும் காலங்களில் எண்ணிமமேடைக்கு நல்ல வரவேற்பு இருக்கிற நிலையிலும், இந்தப்படத்தை புதுமுயற்சியாக எண்ணிமமேடையில் வெளியிட உள்ளனர். இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் படத்தை திரையரங்குக்கு மாறாக நாளது 16,வைகாசியில் (மே 29) எண்ணிமமேடையில் நேரடியாக வெளியீடு செய்கின்றனர். அடுத்ததாக, ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்து 3 ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் சர்வர் சுந்தரம் படத்தை எண்ணிமமேடையில் வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு கதைத்தலைவியாக வைபவி நடித்துள்ளார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பெண்குயின் படத்தின் வெளியீட்டு நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் திரையுலகம் பாதிப்பை சந்தித்துள்ளது. திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பாதியில் நிற்கின்றன. ஊரடங்கு முடிந்து திரையரங்குகளைத் திறந்தாலும் சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கையைக் காலியாக வைத்து நுழைவுச்சீட்டு விற்க வற்புறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதனால் புதிய படங்களுக்கான வணிகம் பழைய மாதிரி இருக்காது என்று கூறப்படுகிறது. இதேபோல் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ படத்தையும் திரையரங்குகளுக்குப் பதிலாக எண்ணிமமேடையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நாளது 5,ஆனி வெள்ளிக் கிழமை (ஜூன் 19) நேரடியாக வெளியீடு செய்ய உள்ளதாக படக்குழு அதிகாரப்பாடாக அறிவித்துள்ளது. ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தை பேரறிமுக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயனண் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



