கோயம்போடு அதிக பாதிப்புகளைக் கொடுத்த அதே வேகத்தில், தமிழக மருத்துவத் துறை குணமளிப்பை கொடுத்திருக்கிறது. இது கொரோனாவிற்கு அஞ்சி தமிழகம் ஒளிய வேண்டாம். பாதுகாப்பை சிறப்பாக முன்னெடுத்தால் போதும் என்பதை அறிவுறுத்துவதற்காக செய்தியாகும். 03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஒரே நாளில் தமிழகத்தில், இன்றைக்குக் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 939 பேர்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. தமிழகத்தில் இன்று 477 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவியவர்களில் 384 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள். எஞ்சிய 93 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் ஆவர். இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரில் 6 ஆயிரத்து 970 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



