Show all

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த பெண் உள்பட மூவர் பலி! ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,323 பேருக்கு கொரோனா

கொரோனா 2-வது அலை பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 1,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த பெண் உள்பட மூவர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

31,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த பெண் உள்பட பெண் உள்பட மூவர் பலியாகி உள்ளனர்.

கொரோனா 2-வது அலை பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகிறது. முந்தாநாள் 1,353 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள். இந்தநிலையில் நேற்றும் ஒரே நாளில் புதிதாக 1,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 76 ஆயிரத்து 260 ஆக உயர்ந்தது.

இதில் 64 ஆயிரத்து 397 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 1,809 பேர் குணமடைந்தனர். தற்போது 11 ஆயிரத்து 371 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 8 ஆயிரத்து 28 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி நகர்புறத்தில் 38 இடங்களில் 215 பேரும், கிராமப்புறங்களில் 120 இடங்களில் 616 பேரும் என மொத்தம் ஈரோடு மாவட்டத்தில் 831 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் கண்டறியும் வகையில் பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 ஆயிரத்து 858 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளார்கள். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 60 அகவை பெண் கடந்த வியாழக்கிழமையும், 40 அகவைப் பெண் வெள்ளிக்கிழமையும் 65 அகவை முதியவர் சனிக்கிழமையும் கொரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 492 ஆக உயர்ந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.