Show all

கண்ணா பின்னாவென்று, யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானலும் பேசுவதற்கு இன்னும் ஒன்பது நாட்களே உள்ளன.

குறிப்பாக: கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று பேசிய இராசேந்திர பாலாஜியின் நிலை ஒன்பது நாட்களுக்குப் பிறகு, தமிழக மக்கள் தீர்ப்பு எப்படி அமைந்தால், எப்படி மாறும் என்கிற ஒரு சிறு ஆய்வு.

31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: காந்தியைச் சுட்டுக் கொன்றவர் நாதுராம் கேட்சே என்றும், அப்படி வன்முறையில் ஈடுபட்டதால் அவர் தீவிரவாதி என்றும், நாதுராம் கோட்சே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் செயல்பட்டவர் என்றும், அவர் தீவிர ஹிந்து ஆதரவாளர் என்றும் சொன்னால் அவை அனைத்தும் உண்மையான செய்திகளே. அவற்றை யாரும் மெனக்கெட்டு மறுக்க மாட்டார்கள். 

ஆனால் அவற்றை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு சொற்றொடராக கமல் சொன்னது பாஜக, ஹிந்துத்துவா, ஆர்எஸ்எஸ், பாஜக நிழலில் பாதுகாப்பாக இருக்கிற ஆளும் அதிமுக அகியவற்றுக்கு கடும் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது 

தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல்வாதிகளும், அமைப்புகளும்  தாங்கள் யாராக இருக்க வேண்டும் என்று தமிழக மக்கள் தீர்ப்பு வர இன்னும் ஒன்பது நாட்கள் இருக்கிற நிலையில், 
தற்போதைக்கு தங்களுக்கு சோறு கிடைப்பதற்கு வாய்பான அமைப்புகளுக்காக-  கண்ணா பின்னாவென்று, யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானலும் பேசலாம் என்கிற நிலைப்பாட்டில் அருவறுப்பான பேச்சுக்கள் தமிழகத்தில் கமலுக்கு எதிராக அறங்கேறிக் கொண்டிருக்கின்றன.

தற்போதைக்கு பாஜக ஆட்சி அதன் நிழலில் அதிமுக என்ற தளத்தில் பேச்சுகள் அரங்கேறுகின்றன.

இந்திய மக்கள் பாஜகவிற்கு ஆதராகவும், தமிழக மக்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்குவார்களேயானால். அமைச்சர் இராசேந்திர பாலாஜி கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று சொன்னதெல்லாம் தப்பு இல்லை என்று ஆகிவிடும்.

தமிழக மக்கள் தீர்ப்பில் தினகரன் கை ஓங்குமானால் அதிமுக கூடாரம் காலியாகி தினகரன் தலைமையில் அதிமுக புத்தெழுச்சி பெறும். மீண்டும் அந்த அதிமுக, நடுவில் அமையும் அரசை பொறுத்து பாஜக பக்கமாய் நின்றால் இராசேந்திர பாலாஜியின் பேச்சு சமரசம் செய்யப் படும். நடுவண் அரசில் பாஜக அல்லாத ஆட்சி அமையுமானல் இராசேந்திர பாலாஜி நேரடியாக கமலை, கமல் தொண்டர்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். 

தமிழக மக்கள் தீர்ப்பில் ஸ்டாலின் கை ஓங்கி நடுவில் பாஜக ஆட்சி அமையுமானால் இராசேந்திர பாலாஜிக்கு பெரிதாக ஒன்றும் பாதிப்பில்லை. மாறாக நடுவண் அரசில் பாஜக அல்லாத ஆட்சி அமையுமானால் இராசேந்திர பாலாஜியின் வாய்க்கொழுப்பு பேச்சுக்கு நிறைய விலை கொடுக்க வேண்டியிருக்கும் கட்டாயம் கடுமையான சட்ட நடிவடிக்கை அவர் மீது பாயும்.
 
இன்னும் ஒன்பது நாட்களுக்குப் பிறகு யாரெல்லாம், எப்படி யெல்லாம் பெட்டிப் பாம்பாய் அடங்கப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,152.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.