சாதி என்கிற அடையாளம் சமூகத்தில் தெரியாமல் இருக்க வேண்டும் என்று கருதுவது தாழ்த்தப் படுவதும் பிற்படுத்தப் படுவதாலுமே. சாதி என்கிற அடையாளம் அரசிடம் வேண்டப்படுவது இடஒதுக்கீடு நோக்கம் குறித்தானதே. இவ்வாறன நிலையில், மாற்றுச்சான்றிதழில் இனி சாதி பெயர் குறிப்பிட வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இது இளவேனில் முடிந்து முதுவேனில் தொடங்கும் காலம். முதுவேனில் காலம்தாம் மாணவர்களுக்கு கல்வியாண்டு தொடங்குகிறது. எனவே மாணவர்களுக்கு இது பள்ளியில் சேரும், மற்றும் உயர் கல்விக்கு மாறும் காலமாகும். இந்நிலையில், மாற்றுச்சான்றிதழ் வழங்கும்போது, அதில் மாணவரின் சாதியை குறிப்பிட வேண்டிய தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள வருவாய்த்துறை மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் சாதிச்சான்றிதழ் தனியாக வழங்கப்பட்டு வருவதால், மாற்றுச்சான்றிதழில் மாணவரின் சாதியைக் குறிப்பிட வேண்டிய தேவையில்லை என்றும் அதில் தெரியப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில், வருவாய்த்துறை மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு மாற்றுச் சான்றிதழையே மூலச் சான்றிதழாக மாணவர்களிடம் கேட்கின்றன. மேலும் வீட்டைச் சுற்றியுள்ள பத்து பேரிடம்- 'தான் இந்த சாதிதான்' என்று கையொப்பம் வாங்கி வரவேண்டும் என்கிற நடைமுறையையும் பின்பற்றுகின்றன. மாற்றுச்சான்றிதழில் சாதி குறிப்பிடாத பட்சத்தில், வீட்டைச் சுற்றியுள்ள பத்து பேரிடம்- 'தான் இந்த சாதிதான்' என்று வாங்குகிற கையொப்பமே மூலச்சான்றாக வலுப்பெறும். சாதி என்கிற அடையாளம் அரசிடம் வேண்டப்படுவது இடஒதுக்கீடு நோக்கம் குறித்தானதே. சாதி என்கிற அடையாளம் சமூகத்தில் தெரியாமல் இருக்க வேண்டும் என்று கருதுவது தாழ்த்தப் படுவதும் பிற்படுத்தப் படுவதாலுமே. என்கிற நிலையில், தன்னைச் சுற்றியுள்ள வீட்டார்களையே அந்த மாணவனின் சாதியை தெரிவிப்பதற்கான மூலமாக அரசு வலுப்படுத்துவது எவ்வாறு முறையாகும். சாதி என்கிற அடையாளம் சமூகத்தில் தெரியாமல் இருக்க வேண்டும் என்று கருதுவது தாழ்த்தப் படுவதும் பிற்படுத்தப் படுவதாலுமே. சாதி என்கிற அடையாளம் அரசிடம் வேண்டப்படுவது இடஒதுக்கீடு நோக்கம் குறித்தானதே. மாணவனின்; இடஒதுக்கீட்டு நோக்கத்தோடு, சமூகத்தால் தாழ்த்தப் படுவதும் பிற்படுத்தப் படுவதிலிருந்தும் காக்கப் படவேண்டும். சமூகத்தில் சாதி அடையளாத்திற்காக அலையவிடாமல் கண்ணியம் காக்கவேண்டியது அரசின் கடமை. மேலும், சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது மாணவரின் பெற்றோர், பாதுகாவலர் விருப்பப்பட்டால் சாதி இல்லை, சமயம் இல்லை என்று குறிப்பிட்டு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், சாதி தொடர்பான கேள்வியை நிரப்ப வேண்டாம் என்று மாணவர் தரப்பில் தெரிவித்தால் அந்த இடத்தை நிரப்பாமல், அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க பள்ளித்தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது பழியை சம்பந்தப் பட்ட தனிமனிதன் மீது திணித்து விட்டு அரசு தப்பித்துக் கொள்ளும் நடவடிக்கையாகும். இது இட ஒதுக்கீட்டிலிருந்து அரசு படிப்படியாக ஒதுங்கிக் கொள்வதற்கு மேற்கொள்ளப் படுகிற ஆதிக்க சாதிகளின் தூண்டுதலாகும். சமூகநீதியை குழிதோண்டி புதைப்பதற்கான குழித்தோண்டல் ஆகும். தற்போதைக்கு மாணவனின் சாதி அடையாளத்தை பரிந்துரைப்பதற்கு: சுற்றுப்புறத்தாரின் பத்து கையெழுத்து கேட்கப் படுகிறதே அதுதான் நெருடலானது. மாற்றுச் சான்றிதழில் சாதி இடம்பெறுவது இடஒதுக்கீட்டிற்கான அரசின் அங்கிகாரமே. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,153.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



