Show all

தமிழ்நாட்டில் மேலும் ஒரு கிழமைக்குத் தொடரும் ஊரடங்கு- அனுமதிக்கப்பட்டுள்ள சில தளர்வுகள்!

தமிழ்நாட்டில் மேலும் ஒரு கிழமைக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், சில பல கட்டாயத் தேவைகளுக்கு புதிய தளர்வுகள் நடைமுறைக்கு வந்தன. 

24,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழகத்தில் மேலும் ஒரு கிழமைக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், புதிய தளர்வுகள் நடைமுறைக்கு வந்தன. 

கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதில் இருந்து, தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக இந்தக் குறுவியின் (வைரஸ்) தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு செய்யபட்டு வருகிறது.

அந்தவகையில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக முதலில் இரண்டு கிழமைகளும் மேலும் ஒரு கிழமையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு பயனால் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மேலும் ஒரு கிழமைக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் ஊரடங்கு நீட்டிப்பில் புதிய தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி.,

1. காய்கறி, மளிகை கடைகள், மின்பொருளகம், வண்;பொருளகம், வாகன உதிரிப்பாகம் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தொடரும்
2. கொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் உட்பட 38 மாவட்டங்களிலும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
3. காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள் மாலை 5 மணி வரை செயல்படலாம் . காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் கடைகள் மாலை 5 மணி வரை செயல்படலாம். 
4. மீன் இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளன. 
5. தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள் 30விழுக்காட்டுப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
6. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 விழுக்காட்டு பத்திரப்பதிவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் 50 விழுக்காட்டு குரி (டோக்கன்) மட்டுமே வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடத்தலாம்.
7. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50விழுக்காட்டுப் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டும் நெறிமுறைகளுடன் செயல்படலாம்.
8. கோவை, திருப்பூர், நாமக்கல் ,ஈரோடு, கரூர், சேலம், திருச்சி, மதுரையில் ஏற்றுமதி நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏற்றுமதி நிறுவனங்கள் 10விழுக்காட்டுப் பணியாளர்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்படலாம்.
9. கொரோனா குறையாத 11 மாவட்டங்களில் வாடகை தானி, வாடகை தேர்களுக்கு தடை தொடர்கிறது.
10. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் சுயதொழில், தேர், துள்ளுந்து பழுதுபார்க்கும் கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.