Show all

தமிழகத்தைச் சீரமைக்கும் தேவை எதுவும் இல்லை கமல்! சிதைப்பவர்களை சிதறியோடச் செய்ய முடியுமா உங்களால்

ஞயிற்றுக் கிழமை அன்று முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார் கமல் ஹாசன். ஆனால் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் அதை முன்னெடுப்பதுதான் நெருடல்.

25,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஞயிற்றுக் கிழமை அன்று முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார் கமல் ஹாசன். ஆனால் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் அதை முன்னெடுப்பதுதான் நெருடல். ஏனென்றால், இந்தியாவிலேயே சீரமைக்கப்பட்ட, தன்னிறைவு பெற்ற, ஒரு இனிமையான மண் என்றால் அது தமிழகம் மட்டுமே.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அன்று முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறது. கூட்டணி வைத்தோ அல்லது தனியாகவோ போட்டியிட இருக்கிறது. இதற்கான வேலைகளை கட்சி தொண்டர்களும், அக்கட்சியின் தலைவருமான கமல் ஹாசனும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் கமல்ஹாசன் தென் தமிழகத்தில் இருந்து சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார் என்று மக்கள் நீதிமய்யம் கட்சி தெரிவித்துள்ளது. 

உண்மையில் தமிழகத்தைச் சீரமைக்க ஒன்றும் இல்லை. சீரமைந்த தமிழகத்தின் தன்னிறைவை, மேன்மையை, கல்வியை, மருத்துவத்தை, அண்ணா பல்கலைக்கழகத்தை, இனிமையான சூழலை சிதைக்கும் அடாவடியை அதிமுகவின் தோளில் அமர்ந்து அரங்கேற்றி வருகிறது ஒன்றிய ஆட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி பாஜக.

அதிமுகவை வீழ்த்தி பாஜகவை தனிமைப் படுத்தி சீரமைந்த தமிழகத்தின் தன்னிறைவை, மேன்மையை, கல்வியை, மருத்துவத்தை, அண்ணா பல்கலைக்கழகத்தை, இனிமையான சூழலை தக்க வைக்க வேண்டியதுதான் தற்காலத்து தமிழகத்தின் தேவையாகும். அந்த முயற்சிக்கானதாக அமையுமா கமலின் மக்கள் நீதி மய்யம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.