சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்து, பாலை தவிர வேறு எதுவும் வாங்க வெளியே செல்ல முடியாது. போனாலும் திறந்திருக்காது. மருத்துவக்குழு பரிந்துரையால் கடுமையான ஊரடங்கு சென்னையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நுண்ணுயிரிப் பரவல் சென்னையில் மிக மிக கடுமையாக உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருந்த அறிவிப்பில், அடுத்துவரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் தெய்வத்திருவினர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவத் தேவைகளுக்குமட்டுமே தனியார் வாகன பயன்பாடு அனுமதிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் கட்டாயத்தேவைப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதிகளில் நுண்ணுயிரிக் கொல்லி தெளிப்பு ஒரு நாளைக்கு இருமுறை முன்னெடுக்கப்படும் மருந்து, பாலை தவிர வேறு எதுவும் வாங்க வெளியே செல்ல முடியாது. போனாலும் திறந்திருக்காது. மருத்துவக்குழு பரிந்துரையால் கடுமையான ஊரடங்கு சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட வுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



