Show all

தமிழ்நாட்டில் இல்லை! இந்தியா முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் இன்று திறப்பு

இந்தியா முழுவதும் வழிபாட்டுத் தலங்களை இன்று திறக்க நடுவண் அரசு அனுமதி அளித்துள்ளது.

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  ஊரடங்கை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகளை நடுவண் அரசின் உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.  அதன் படி இன்று முதல் இந்தியா முழுவதும் மத வழிபாட்டு தலங்கள், மத வழிபாடு மேற்கொள்ளும் இடங்கள் ஆகியவை திறக்கப்பட உள்ளன. பல மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

திருப்பதி கோயிலில் இன்று ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வணிகவளாகங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், விருந்தோம்பல் சேவை வழங்கும் பிற நிறுவனங்கள் இன்று முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனி மனித இடைவெளியுடன் வழிபாட்டு தலங்கள், வணிகவளாகங்கள், போன்றவை செயல்படுதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நடுவண் நலங்குத்துறை அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.