வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த கிழமை அனுமதிக்கப்பட்டிருந்த 20 அகவைப் பெண், கொரோனாவின் கடுமையான பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். 25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நலங்குத்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த 18 பேரில் 15 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் தமிழகத்தில் 18 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 269 பேரில் பலர் 40 அகவையைக் கடந்தவர்கள் ஆவர். குறிப்பாக உயிரிழந்தவர்களில் பலர் 50 முதல் 60 அகவைக் கடந்தவர்கள் ஆவர். அவர்களில் பலருக்கு உடலில் ஏற்கனவே நோய் பாதிப்புகள் இருந்திருக்கின்றன. இந்த நோய் பாதிப்புகளுடன் கொரோனாவும் சேர்ந்ததால் மாரடைப்பு, சிறுநீரக செயல் இழப்பு, மூச்சுப் பிரச்சனை ஏற்பட்டு பலர் இறக்கிறார்கள். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த கிழமை அனுமதிக்கப்பட்டிருந்த 20 அகவைப் பெண், கொரோனாவின் கடுமையான பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். இவருடைய இறப்புக்கு தீவிரமான கொரோனா, அதனால் ஏற்பட்ட கடுமையான சிறுநீரக செயல் இழப்பு, ஆகியவை காரணம் என்று நலங்குத்துறை கூறியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



