தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனாஆட்சிமை மாவட்டங்களாக அறியப்பட்டு அங்கு ஊரடங்கு தளர்வு முன்னெடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் எட்டு கொரோனாஆட்சிமை மாவட்டங்களில் 4 நாட்களாக புது தொற்று ஏதும் இல்லை. 09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சேலம், ஈரோடு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆகிய எட்டு கொரோனாஆட்சிமை மாவட்டங்களில், கடந்த நான்கு நாட்களாக ஒரு புதிய தொற்றும் இல்லை. தமிழகத்தில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சென்னையே. அதனால் சென்னையில் கொரோனா தொற்று பரவாத வகைக்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது. திருப்பத்தூரில் 109, திண்டுக்கல்லில் 76, திருவள்ளூரில் 48, நாகையில் 44, விழுப்புரத்தில் 36, தூத்துக்குடி 27, திருவாரூரில் 27, தென்காசியில் 26, சிவகெங்கையில் 12, இராமநாதபுரத்தில் 11, பெரம்பலூரில் 5, அரியலூரில் 4, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு மட்டும் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



