தமிழ்த்; திரையுலகின் பேரறிமுக நடிகர் விஜய், கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1.30 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார். 09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்த்; திரையுலகின் பேரறிமுக நடிகர் விஜய், கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1.30 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார். திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சிக்கு ரூ.50 லட்சம், முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், தலைமைஅமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நிவாரணமாக அளித்துள்ளார். அண்டை மாநிலங்களான கேரளாவுக்கு ரூ.10 லட்சம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். கொரோனா பாதிப்புகளுக்கு உதவ தன்னுடைய கொண்டாடிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



