சசிகலா விடுதலை நாள் குறித்து இன்னும் இரண்டு நாட்களில் தெரியவரும் என்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டு இருக்கிறது. சசிகலா விடுதலையான பிறகு அதிமுகவில் எந்த மாதிரியான மாற்றங்கள் நடக்கும், அல்லது குழப்பங்கள் ஏற்படும் என்பதைப்பற்றி அரசியல் விமர்சகர்கள் பல்வேறு யூகங்களை முன்வைத்து வருகிறார்கள். எனவே சசிகலா சிறையில் இருந்து வெளியானதும் அரசியல் களம் பல மடங்கு சூடு பிடிக்கும் என்பது மட்டும் உண்மை. 12,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், இன்னும் இரண்டு நாட்களில் சசிகலா எப்போது விடுதலை ஆவார் என்ற தகவல் வெளியாகப் போகிறதாம். அவரது வழக்கறிஞர் இராஜா செந்தூர்பாண்டியன் இதை உறுதி செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்குக்காக பெங்களூர் சிறப்பு அறங்கூற்றுமன்றத்தால் நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் செயலலிதாவின் தோழி சசிகலா. சிறை தண்டனையைத் தவிர 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது. இதுவரை சசிகலா அந்த அபராதத் தொகையை செலுத்தாத நிலையில் மூன்று ஆண்டுகளை கடந்து பெங்களூர் சிறையில் வாடி வருகிறார். இந்த நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு தனது வழக்கறிஞர் இராஜா செந்தூர் பாண்டியனுக்கு சசிகலா ஒரு மடல் எழுதி இருந்தார். அந்த மடலில் உள்ள அம்சங்கள் வெளியில் கசிந்தன. அக்கடிதத்தில் செலுத்த வேண்டிய அபராத தொகையை தயார் செய்து வைக்கும்படியும், அறங்கூற்றுமன்றத்தை அணுகும்படியும் வழக்கறிஞரை சசிகலா கேட்டுக் கொண்டிருந்தார். இதுவரை அவர் தனது விடுதலை பற்றி எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்ததைப் போன்ற தோற்றம் காணப்பட்டது. ஆனால் இந்த மடலின் மூலமாக அவர் விடுதலையாகி வெளியே வருவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பது தெளிவானது. இதனிடையே ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்த இராஜா செந்தூர்பாண்டியன், இன்னும் ஒரு கிழமையில் சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். கர்நாடக சிறைத்துறை, நன்னடத்தை விதிமுறைகளின்படி ஒவ்வொரு கைதிக்கும் மாதம் மூன்று நாட்கள் தண்டனை குறைப்பு சலுகை கிடைக்கும். 43 மாதகாலம் சசிகலா சிறையில் இருந்துள்ளார். எனவே ஒரு மாதத்துக்கு தலா மூன்று நாட்கள் என்று கணக்குப் போட்டால் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைப்பு செய்யப்படும். எனவேதான் அவர் ஒரு கிழமையில் விடுதலை செய்யப் படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று இராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். இதனிடையே இராஜா செந்தூர்பாண்டியன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், சசிகலாவின் அபராதத் தொகை பற்றிய கர்நாடக அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்துள்ளோம். தற்போது, ஆயுதபூசைக் கொண்டாட்டத்தால் அறங்கூற்றுமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனது நாளை அறங்கூற்றுமன்றத்தில் இருந்து ஏதாவது தகவல் வெளியாகும். சசிகலா கட்ட வேண்டிய அபராத தொகை குறித்து உத்தரவு வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி உத்தரவு வெளியானதும் உடனடியாக அறங்கூற்றுமன்றத்தில் பணத்தை செலுத்துவோம். எனவே அதிகபட்சம் இரண்டு நாட்களில் சசிகலா விடுதலை தொடர்பான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு இராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். சசிகலா விடுதலை நாள் குறித்து இன்னும் இரண்டு நாட்களில் தெரியவரும் என்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டு இருக்கிறது. சசிகலா விடுதலையான பிறகு அதிமுகவில் எந்த மாதிரியான மாற்றங்கள் நடக்கும், அல்லது குழப்பங்கள் ஏற்படும் என்பதைப்பற்றி அரசியல் விமர்சகர்கள் பல்வேறு யூகங்களை முன்வைத்து வருகிறார்கள். எனவே சசிகலா சிறையில் இருந்து வெளியானதும் அரசியல் களம் பல மடங்கு சூடு பிடிக்கும் என்பது மட்டும் உண்மை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



