நடிகர் இரஜினிகாந்த் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, இரஜினி மக்கள் மன்ற தென் சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக இன்று அதிகாலை கோ பூசை முன்னெடுக்கப்பட்டது சங்கரமடத்தில். 26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை தியாகராய நகரில் உள்ள சங்கரமடத்தில், இரஜினி மக்கள் மன்ற தென் சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக இன்று அதிகாலை கோ பூசை நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நடிகர் இரஜினிகாந்த் வெற்றி பெறுவார் என்று உறுதியாகத் தெரிவித்தார். நடிகர் இரஜினிகாந்த் தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அரசியலுக்கு வருவது குறித்து சில நாட்களுக்கு முன் அவர் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இந்த ஆண்டு இரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரது கொண்டாடிகள் மிகுந்த உற்சாகத்துடன் முன்னெடுத்து வருகின்றனர். நடப்பு சட்டமன்றத் தேர்தலில் இரஜினி உறுதியாக தமிழக முதல்வர் ஆவர் என்றும், ஆகவேண்டும் என்றும் புசை புனஸ்காரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன் குவிந்த கொண்டாடிகள் பலர், நள்ளிரவில் அணிச்சல் (கேக்) வெட்டி கொண்டாடினர். திரைப் பேரறிமுகங்கள் பலரும் இரஜினிகாந்திற்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியும் இரஜினிக்கு பிறந்தநாள் தெரிவித்த செய்தியும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இரஜினிகாந்தின் தமிழக செல்வாக்கை ஒரு இயங்கலை இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் ஒற்றைப்படை எண்ணில் தெரிவித்திருப்பதுதான்- பாஜக சார்புகளுக்கு ஆசை யானை அளவு இருந்தாலும் அமைப்பு நோட்டாவுக்கு கீழ்தான் என்று தெரிவிப்பதாக இருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



