Show all

இந்திய நாடாளுமன்றத்திற்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று!

இந்தியாவின் ஒன்பது மாநிலங்களில் உள்ள 72 நாடாளுமன்றத்  தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. மும்பை பங்குச் சந்தையும், தேசியப் பங்குச் சந்தையும் விடுமுறை அறிவித்துள்ளன. இந்த இரண்டின் தலைமையகங்களுமே இந்த நான்காவது கட்ட தேர்தல் அறிவிப்புக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் காரணமாய்.

16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின் ஒன்பது மாநிலங்களில் உள்ள 72 நாடாளுமன்றத்  தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. மகாராஷ்டிராவில் 17, உத்தரப் பிரதேசத்தில் 13, ராஜஸ்தானில் 13, மேற்குவங்கத்தில் 8, இந்திய நடுவப் பிரதேசத்தில் 6, ஒடிசாவில் 6, பீகாரில் 5, ஜார்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீரில் 1 தொகுதி என மொத்தம் 72 தொகுதிகளில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த 9 மாநிலங்களில் 12.79 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். காலை 9 மணி துவங்கி, மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இன்றைய தேர்தலில் நடிகை ஊர்மிளா மடோன்கர், பிரியா தத், பூனம் மகாஜன், டிம்பிள் யாதவ், மிலிந் தியோரா உள்ளிட்டோர் மின்மினிகள் வேட்பாளர்களாக உள்ளனர். மொத்தம் 543 வேட்பாளர்கள் இன்று களத்தில் உள்ளனர்.
இந்திய நாடாளுமன்ற ஏழு கட்டப் தேர்தலில் இந்த நான்காவது கட்டத் தேர்தலுக்கு மட்டுமே மும்பை பங்குச் சந்தையும், தேசியப் பங்குச் சந்தையும் விடுமுறை அறிவித்துள்ளன. இந்த இரண்டின் தலைமையகங்களுமே இந்த நான்காவது கட்ட தேர்தல் அறிவிப்புக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் காரணமாய்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,137.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.